பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ‘தமிழ் மீட்பு இயக்கம்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார். தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கலந்துரையாடல் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழர் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் மீட்க தொடர்ந்து போராட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து விலகிய ராமதாஸ் புதிய இயக்கம் துவக்கம்
