நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளராகப் பணியாற்றி வரும் கவி பிரசாத்தை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், கவி பிரசாத் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூறப்படும் முறைகேட்டில் கவி பிரசாத்துக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு வழக்கில் இந்தக் கைது நடவடிக்கை முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது. விசாரணையின் முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
