திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை எனத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று (நவ.27) விசாரணைக்கு வந்தது. அப்போது, “கார்த்திகை தினம் 11 நாட்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதே தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்” என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், அரசியல் காரணங்களால்தான் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது.
திருப்பரங்குன்றம் தூணில் மீண்டும் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை
