தமிழகத்தில் உள்ள காய்கறி சந்தைகளில் சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.230-க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது ரூ.70 குறைந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிலோ ரூ.80-க்கு விற்பனையான பீன்ஸ் ரூ.40 ஆகவும், கத்திரிக்காய் ரூ.80-ல் இருந்து ரூ.30 ஆகவும் குறைந்துள்ளது. காய்கறிகளின் விலை சரிவால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் குறைந்தன… பொதுமக்கள் மகிழ்ச்சி
