Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டிச.1 முதல் தாயுமானவர் திட்டம் விரிவாக்கம்: 2.27 லட்சம் குடும்பங்கள் பயன்!

டிச.1 முதல் தாயுமானவர் திட்டம் விரிவாக்கம்: 2.27 லட்சம் குடும்பங்கள் பயன்!

தமிழகத்தில் ரேஷன் பொருட்களைப் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கும் தயுமானவர் திட்டம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

ஏற்கெனவே 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அடுத்தகட்டமாகத் திருநங்கைகள், கைம்பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்ட விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 2.27 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர். இதன்மூலம் தயுமானவர் திட்டத்தின் மொத்தப் பயனாளிகளின் எண்ணிக்கை 4.89 லட்சமாக உயரும்.

error: Content is protected !!
Secret Link