அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை ஒட்டி பிளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது இதனை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வந்ததால் அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாளை மறுநாள் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஆயிரம் நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிசாமி நேரில் சந்தித்து கரூர் இடைத்தேர்தல், அரசியல் குறித்து விவாதிக்க உள்ளதாக கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் பேட்டி.
கரூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை 29- ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக கரூர் மாநகரில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் அதிமுக நிர்வாகிகளால்

வைக்கப்பட்டிருந்தது இதனை அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக கூறி மாநகராட்சி டவுன் பிளானிங் ஆபிஸர் விஜயலட்சுமி மற்றும் உதவி செயற்பொறியாளர் சுகுமார் ஆகியோர் அகற்ற வந்ததால் அதிமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் மாநகராட்சி ஆணையர் அதிகாரிகளை அவர்களை வரச் சொன்னதால் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
மேலும், கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கரூர் வருகிறார்.
கரூர் கோவை சாலையில் உள்ள கொங்கு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ள இந்த, கூட்ட இடத்தினை கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த சில ஆண்டுகளில் தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்த அவர், முதல் முறையாக நிர்வாகிகளை மட்டும் சந்திப்பதற்காக வருவது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர்., வரவிருக்கும் கரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் அதிமுக கழக வளர்ச்சி பணிகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆலோசனை வழங்க உள்ளார் என தெரிவித்த அவர், கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும்,
காவல்துறை சுட்டிக்காட்டிய பேனர்கள் வைப்பதில் உள்ள இடையூறுகள் சரி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
