Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெட்ரோல் பங்க் பின்புறம் திடீர் தீ…. கரூரில் பரபரப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் அருகில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கின் பின்புறம் அமராவதி ஆற்றுப் படுகையில் வறட்சியின் காரணமாக முட்செடிகள் காய்ந்து காணப்பட்டது. இதனை மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர். தீ மளமளவென பற்றி ஆற்றுப் படுகையில் உள்ள முட்புதற்கள் பற்றி எரிந்தது. இதனால் பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் தடுப்பதற்காக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பெட்ரோல் பங்கிற்கு பின்புறம் இருந்த செடிகள், ஏற்கனவே பயன்படுத்திய டீசல் டேங் உள்ளிட்ட இடங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!