Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேலுமணி சொத்துகுவிப்பு…. மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

அதிமுக முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி, தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குக்கு தடை விதிக்க கோரி  வேலுமணி  சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட் அதை ஏற்கவில்லை. எனவே  டில்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவை தள்ளுபடி செய்து  உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.  எனவே வேலுமணி சொத்துக்குவிப்பு வழக்கு இனி சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!