Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையை அரியலூர் கலெக்டர் ஆய்வு….

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் முறையே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த அறையில் 940 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 779 கட்டுப்பாட்டு கருவிகளும், 386 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் என மொத்தம் 2105 மின்னனு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை கேமரா பொருத்தப்பட்டு காவல் துறை பாதுகாப்புடன் 24

மணிநேரமும் கண்காணிக்கப்படுவதையும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.பூங்கோதை, தேர்தல் வட்டாட்சியர் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!