Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈக்வடாரில் நிலச்சரிவு… 16 பேர் பலி ….

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் சிம்பொரொசா மாகாணம் அலுசி கன்டோன் நகரின் மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் சிக்கின. இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவால் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், நிலச்சரிவில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈக்வடாரில் கடந்த 19-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!