Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே மின்னல் தாக்கி 4 பசு மாடுகள் பலி……

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜீவ் காந்தி விவசாயம் செய்து வருகிறார். குமுளூரில் தனக்கு சொந்தமான இடத்தில் மாட்டு பட்டி அமைத்து 4 மாடுகள் வளர்த்து வருகிறார். மேலும் அதற்கு தேவையான 100 வைக்கோல் கட்டுகள் அடுக்கி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

அப்போது மாட்டின் பட்டிக்கு அருகே ராஜீவ் காந்தி சென்ற போது திடிரென பலத்த சத்தத்துடன் இடி மின்னல் சத்தம் கேட்டுள்ளது. மாட்டுபட்டி ,அருகில் இருந்த மரம் மற்றும் வைக்கோல் மீது தீ பிடித்து எரிந்துள்ளது. மேலும் 4 மாடுகளும் மின்னல்

தாக்கி பலியாகியுள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அனைக்க போராடி உள்ளனர். தகவலறிந்த புள்ளம்பாடி தீயணப்பு மீட்பு படையின் நிலைய அதிகாரி பாரதி தலைமையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர் மேலும் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரைண மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!