கையும் களவுமாக சிக்கிய செல் போன் பறிப்பு கும்பல்
திருச்சி அரியமங்கலம் ஜெய்லானி தெரு உக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா ( வயது 54) இவர் அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார் அப்போது
அரியமங்கலம் நேருஜி நகர் ஜோசப் கிருஷ்ணன், 2 -வது தெருவை சேர்ந்த சபரிநாதன் (22) ராஜ்குமார் (24) ,மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து சாகிப் பாஷாவின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறிக்க முயன்றனர்.
அதைத்தொடர்ந்து அவர் திருடன் திருடன் என கத்தினார் உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கும்பலையும் சுத்தி வளைத்து பிடித்து அரியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர் பின்னர் சாதிக் பாஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவன் உள்ளிட்ட மேற்கண்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது
திருச்சி பீமநகர் கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் இவரது மனைவி அம்மா கண்ணு (வயது 62) இவர் கண் அறுவை சிகிச்சைக்காக கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்னை புறப்பட்டுச் சென்றார்.
அப்போது சுதாரிப்பாக வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றனர் பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது எந்த பொருளும் திருட்டு போகவில்லை நகை பணத்தை அவர்கள் சென்னைக்கு எடுத்துச் சென்றதால் அந்த நகை பணம் தப்பியது பின்னர் இது பற்றி அம்மாக்கண்ணு பாலக்கரை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து திருட முயன்ற பீமநகர் பண்டரிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டியன் 30 என்பவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகாமையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார் இதுபற்றி கோ அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்
