Skip to content

பங்குனி உத்திர தீர்த்தவாரி… குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி

சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸரர் கோவிலி பங்குனி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிலையில் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டிய போது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நங்கநல்லூர் அருகே கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குளத்தில் 5 அடிக்கு சேறு தேங்கிய இருந்ததால் அதில் சிக்கி அர்ச்சர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!