Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் தண்ணீர்தேடி வந்த மான்… வாகனம் மோதி பலி….

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி, வம்பன், திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் புள்ளிமான்கள் இரை தேடியும், தண்ணீர் குடிப்பதற்கும் தைல மரக்காட்டில் சுற்றி வருகிறது. இந்தநிலையில், ஆலங்குடி அருகே வம்பனில் சாலையை புள்ளிமான் ஒன்று கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு புதுக்கோட்டை மச்சுவாடிக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!