Skip to content

கைக்குழந்தை, லக்கேஜூடன் வந்த பெண்ணுக்கு விமானத்தில் உதவிய நடிகர் அஜித்…

இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோவில் இருந்து சென்னைக்கு 10 மாத கைக்குழந்தை மற்றும்  சூட்கேஸ், குழந்தைக்கான பேக் உள்ளிட்ட லக்கேஜ்களுடன்  ஒரு பெண் தனியாகப் பயணம் செய்தார். அந்த பெண்  லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு வரும்போது குழந்தை மற்றும் லக்கேஜ்களுடன் கஷ்டப்படுவதை அங்கிருந்த நடிகர்  அஜீத்குமார் பார்த்து விட்டார்.

உடனடியாக சென்று அந்த பெண்ணுக்கு உதவினார்.  லக்கேஜ்களை  அவரே  எடுத்துச்சென்று விமானத்தில் அந்த பெண்ணின் இருக்கை அருகே வைத்தார். பெண்ணிற்கு உதவி செய்த நடிகர் அஜித்குமாரின் செயல் குறித்து அப்பெண்ணின் கணவர் நெகிழ்ச்சி அடைந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அப்பெண்ணிடம் எனக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த உணர்வு எனக்குப்புரியும் எனக்கூறி அவரே பொருட்களை தூக்கி உதவியது குறித்து இன்ஸ்டாவில்  அந்த பெண்ணின் கணவர் கார்த்தி நன்றியோடு பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் அஜீத்குமாரின் மனிதநேயத்தைபாராட்டி நன்றி தெரிவித்து உள்ளார்.  இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!