Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி (49). கூலித் தொழிலாளி. இவர் 2016 -ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி பட்டுக்கோட்டை அருகே தனது நண்பரின் வீட்டுக்கு வந்த போது, அங்கிருந்த 6 வயது சிறுமிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேலுச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!