Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்…

திமுக வரலாற்றில் முதல்முறையாக விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் முதல் மாநில செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான மாவட்ட நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த நிலையில் கடந்த வாரம் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலாளர்களாக ஆர்.கோபால்ராம், எஸ்.கார்த்திக், மு.வாசிம்ராஜா, சுரேஷ்.ஜே.மனோகரன், செல்வி.நிவேதா ஜெசிகா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாநில செயலாளர் தயாநிதி மாறன் எம்பி தலைமையிலான நிர்வாகிகள் நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  அந்த நிகழ்வின் போது திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரை முருகன் உடன் இருந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!