Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடக தேர்தல்.. வேட்பு மனுவை வாபஸ் பெறும் ஓபிஎஸ் வேட்பாளர்…

கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் அதிமுக பெயரில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது. இதை எதிர்த்து கர்நாடக தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து, அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியது. அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் காந்திநகர் தொகுதியில் போட்டியிட தான் தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்ததற்கு விளக்கம் கேட்டு குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் குமார் தனது வேட்புமனுவையே வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!