Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த சிறைக்காவலர்..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரையைச் சேர்ந்தவர் சிறை காவலர் ராஜா. இவர்களது குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்குள் சொத்து தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் ராஜா இன்று மாலை திடீரென லால்குடி போீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்தார். அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜாவை தீக்காயங்களுடன் லால்குடி ஜிஎச்சிற்கு கொண்டு சென்றனர். உடனடியாக ராஜா சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறை காவலர் ராஜா தற்போது சஸ்பெண்ட்டில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!