சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமதுசலீம். இவரது மகள் தபசு பாத்திமா ( 15), இவர்களது உறவினர் கோட்டூரை சேர்ந்த அப்துல்ரசாக் இவரது மகள் சுமையா பாத்திமா (17). இவர்கள் குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம், வஜ்ர கருவு பகுதியில் உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். இன்று காலை சென்னை நோக்கி காரில் வந்தனர். அதில் 6 பேர் இருந்தனர். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த டிரைவர் விஜய் (32) என்பவர் காரை ஓட்டி வந்தார். இந்த நிலையில், இன்று காலை ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அருகே கார் வந்தது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக , டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த சிறுமிகள் தபசு பாத்திமா, சுமையா பாத்திமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்ற 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவ இடத்திற்கு சிப்காட் போலீசார் சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய கார் விபத்து…2 சிறுமிகள் பலி…

Tags:கார் விபத்து (tag)