Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா….

 

பிஎஸ்என்எல் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் திருச்சி கண்ட்டோன்மென்ட் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 10அம்ச கோரிக்கைகளை. வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.  ஒப்பந்த ஊழியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்புப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை திருப்பி வழங்கிட வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட வேண்டும்,

பொது மேலாளர் அலுவலகத்தில் லிப்ட் வசதி, மன்னார்புரம் பகுதியில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தண்ணீர் வசதி, அலுவலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் முருகேசன், ஜான்பாஷா, சுந்தர்ராஜ், மாவட்ட செயலாளர்கள் சின்னையன், முபாரக் அலி, சுந்தர்ராஜ், மாவட்ட பொருளாளர்கள் கோபி,அன்பழகன், சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!