Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிங்கப்பூர் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.25 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டார்.

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணா,  கருணாநிதி நினைவிடங்கள் சென்று மரியாதை செலுத்தினார்.  அதைத்தொடர்ந்து விமான நிலையத்தில்  அமைச்சர்கள் துரைமுருகன், கே. என் .நேரு, செந்தில் பாலாஜி, பொன்முடி, எம்.பிக்கள், திமுக முன்னோடிகள் முதல்வரை வழியனுப்பி வைத்தனர். முன்னாள் அமைச்சர் ஆவடி நாசரும்  வழியனுப்ப வந்திருந்தார். அவரின் முதுகில் தட்டியபடி முதல்வர் நாசரிடம் பேசினார்.

சிங்கப்பூரில்   2 நாள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார்.  தொடர்ந்து, 25-ந்தேதி ஜப்பான் செல்கிறார். அங்கு 7 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 31-ந்தேதி பிற்பகல் சென்னை திரும்புகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!