Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெற்றியை டோனிக்கு அர்ப்பணிக்கிறேன்….. ஜடேஜா பேட்டி

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.  இதில் சென்னை அணி வென்றது.   சென்னை அணியின் வெற்றிக்கு காரணமான  ஜடேஜா, போட்டி முடிந்ததும் கூறியதாவது:

“எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சென்னை அணிக்காக ஐந்தாவது முறை கோப்பையை வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது. இது அற்புதமான உணர்வு.. உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சர்யத்தை கொடுத்தது. தாமதமான இரவிலும் மழை நிற்கும்வரை ரசிகர்கள் காத்திருந்தனர். சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய வாழ்த்துக்களை சொல்ல வேண்டும்.  இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான டோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். கடைசி நேரத்தில் எதுவாக இருந்தாலும் நான் கடினமாக ஆட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். . மோஹித் ஸ்லோ பால் அதிகம் வீசக்கூடியவர் என்பதால் நேராக அடிக்க நினைத்தேன். அப்படியே செய்தேன். இந்த வெற்றி தருணத்தில் சிஎஸ்கேவின் ஒவ்வொரு ரசிகருக்கும் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!