டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சென்னை வருகிறார். அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். டில்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், டில்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கே உண்டு என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி அகில இந்திய அளவில் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். இதற்காக அவர் தமிழக முதல்வரையும் சந்தித்து பேசுகிறார்.