Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக் சிறப்பு அபிஷேகம்- ராஜ அலங்காரம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பாலமுருகனுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து பாலமுருகனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை

உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து ராஜ அலங்காரத்தில் கையில் வேலுடன் சுவாமி காட்சியளித்தார்.

அதைத் தொடர்ந்து உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு பாலமுருகனுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

விசுவர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாக சிறப்பு அபிஷேக அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!