Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொலை வழக்கில் கைதான 2 பேரை குண்டாசில் கைது செய்ய கலெக்டர் உத்தரவு…

தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் பிரதீப் (23). இவர் தனது வீட்டில் அப்பளம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பிரதீப் அவரது வீட்டின் முன்பு வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கரந்தை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26), கீழ அலங்கம் சிவக்குமார் (25), வடக்குவாசல் சூர்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் கொலை நடந்த அன்று கரந்தை பகுதியில் டாஸ்மாக் கடையில் கடன் கேட்டு ஊழியர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி, ஆயுதங்களை காட்டி தாக்க முயற்சி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் விக்னேஷ், சிவக்குமார் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத், கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு பரிந்துரை செய்தார்.

தொடர்ந்து கலெக்டர் உத்தரவுப்படி, தஞ்சை நகர கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை, திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!