லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று அவர்கள் தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இந்த நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் தனது முதல் திருமண நாள் குறித்தும் நயன்தாரா குறித்தும் எமோஷனலாக பதிவு செய்துள்ளார். அதில் ’என் உயிரோடு ஆதாரமே நீங்கள் தான், ஒரு வருடம் நிறைய தருணங்கள் நிறைந்தது, ஏற்றத்தாழ்வுகள், எதிர்பாராத பின்னடைவுகள், சோதனையான நேரங்கள் இருந்தது. ஆனால் அபரீதமான அன்பு பாசம் கொண்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நீங்கள் என் குடும்பத்தில் இணைந்தீர்கள்.






