Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளிகள் திறப்பு…. உற்சாகத்துடன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வருகை…

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 6 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பொதுவாக ஜூன் ஒன்று அல்லது இரண்டாம் தேதிகளில் பள்ளி திறப்பு இருக்கும் ஆனால் இந்த ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் குறையாததால் இந்த ஆண்டு கூடுதலாக

விடுமுறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள 1 ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளி மாணவர்களுக்கு முதல் நாள் வகுப்பு இன்று துவங்கியது. இதே போல திருச்சி புத்தூர் ஈவேரா சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடனமாடி, மலர் தூவி குழந்தைகளை ஆசிரியர்கள் வரவேற்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!