சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கரூர் வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. ஜேசிஐ டைமண்ட், இந்திய தொழில் கூட்டமைப்பு, யங் இந்தியன்ஸ் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சிறப்பு யோகாசன நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், காவல்துறையினர், மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என சுமார் 250 பேர் பங்கேற்றனர். அருவியல் சித்தர் அன்பு கணபதி இந்த சிறப்பு யோகாசன நிகழ்ச்சியில் பங்கேற்று மன அமைதி, உடல் வலிமை, ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சூரிய நமஸ்காரம், பத்மாசனம், மிருத்யிங்காசனம், உட்காசனம், மார்க்கண்டேயாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை தொகுத்து வழங்கினார்.
சர்வதேச யோகா தினம்…. கரூரில் 250க்கும் மேற்பட்டோர் யோகாசனம்…
