Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு தனியாக வந்த சிவிஎஸ்.. எடப்பாடி தரப்பில் பரபரப்பு..

முன்னாள் முதல்-அமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களுடன் வந்து  மரியாதை செலுத்தினார். இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் எடப்பாடி பழனிசாமி அணியினர் மரியாதை செலுத்திவிட்டு சென்ற பிறகு தனியாக வந்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து வந்த சி.வி. சண்முகம் திடீரென தனியாக வந்து மரியாதை செலுத்தியது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!