Skip to content

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சாரா டெண்டுல்கர்…. போட்டோஸ் வைரல்…

இந்தியாவையும், கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாது. கிரிக்கெட் என்றாலே  தவிர்க்கவே முடியாத பெயர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், சமூகவலைதளங்கள் மூலம் கிரிக்கெட் தொடர்பான பதிவுகளையும், தனது சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகளையும் அவ்வபோது பகிர்ந்து வருகிறார்.

சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் தனது மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா டெண்டுல்கருடன் கென்யாவில் உள்ள மசாய் மாரா சரணாலயத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். மசாய் மாரா சரணாலயம் சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் ஆப்பிரிக்க யானைகளுக்கு பிரபலமானது. சச்சின் தனது சுற்றுலா படங்களை சமூக வலைதளங்களில்

பதிவேற்றியுள்ளார். அங்கு சச்சின் தனது மகள் மற்றும் மனைவியுடன் ஜங்கிள் சஃபாரி சென்று கொண்டிருக்கும்  புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தின் தலைப்பில், ‘மாசாய் மாராவில் குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்கள்’ என சச்சின் எழுதியுள்ளார்.   இந்த பதிவில் பல்வேறு கமெண்டுகளையும், சிலர் இதய எமோஜிகளையும் அளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!