Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேகதடையில் டூவீலரிலிருந்து கீழே விழுந்த திருநங்கை திருச்சியில் பலி….

திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடையை சேர்ந்தவர் ஆகாஷ் என்ற ஷாலினி (21). இவர் தஞ்சையில் வக்கீல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருநங்கையாக மாறி வாழ்ந்து வந்தார். இவர் வேலை காரணமாக டூவீலரில் சென்றார். அப்போது அவர் அமர்வு நீதிமன்ற  போலீஸ் ஸ்டேசன் எதிரே உள்ள சாலையில் வேகத்தடையில் ஏறி இறங்கியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!