Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜூலை மாதத்திற்கான தண்ணீரை திறந்து விடுங்கள்…. ஆணையத்துக்கு, தமிழக அரசு கடிதம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் பாசனத்திற்கு திறக்கும் தண்ணீரின்  அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காவிரி ஆணையம் மற்றும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை வற்புறுத்தி பெறுவதற்கான நடவடிக்கைகளை உறுதியோடு அரசு செய்ய வேண்டும் என விவசாயிகள்  அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது. இதன்படி வழக்கமான அளவை விட குறைவான அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுகிறது என்றும், ஜூலை மாதத்திற்கான 34 டி.எம்.சி. தண்ணீர் பங்கீட்டை திறந்து விட வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!