Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய அரசுக்கு பயப்படுகிறவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்…. எடப்பாடிக்கு… அமைச்சர் உதயநிதி பதிலடி

தஞ்சாவூரில் திமுக நிர்வாகி  இல்ல திருமணத்திற்கு சென்று விட்டு திருச்சி திரும்பிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு பின் திமுக அமைச்சர்கள் பயந்து போய் உள்ளார்கள் என எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்த  கேள்விக்கு , எங்களைப் பார்த்தால் பயந்தது போலவா தெரிகிறது? எதிர்க்கட்சித் தலைவர் அப்படி தான் பேசுவார். யார், யாருக்கு

அடிமை என்பது மக்களுக்கு தெரியும். அதிமுக தான் பாஜகவிற்கு அடிமையாக இருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரியும். கலைஞராக இருந்தாலும் தற்போதைய முதலமைச்சராக இருந்தாலும் நாங்கள் யாரைப் பார்த்தும் அஞ்ச மாட்டோம்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் மேட்டூரிலிருந்து சரியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பேசி தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை முதலமைச்சர் பெற்று தருவார். ஆளுநருக்கு வேறு வேலை இல்லாத காரணத்தால் அவர் அவ்வப்போது டில்லி சென்று வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!