Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் ரயில் பெட்டியில் சிக்கியிருந்த டயரை அகற்றிய ரயில்வே ஊழியர்கள்…

கேரள மாநிலம், எா்ணாகுளம் – காரைக்கால் இடையே விரைவு ரயில் இயக்கப்படுகிறது. வழக்கம்போல கடந்த வியாழக்கிழமை இரவு எா்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட இந்த விரைவு ரயில் கோவை, திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்தது. இதில் 500-க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர்.

அப்போது, ஒரு முன்பதிவு பெட்டியின் அடிப்பாகத்தில் மோட்டாா் சைக்கிள் டயா் சிக்கியிருந்ததை பாா்த்த ரயில்வே ஊழியா்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடன் அடிப்பாகத்தில் சிக்கியிருந்த டயரை அகற்றி அப்புறப்படுத்தினா். பின்னா், குறிப்பிட்ட நேரத்தில் ரயில் புறப்பட்டு சென்றது.

ரயில் பெட்டியின் அடிப்பாகத்தில் டயா் எப்படி, எங்கே சிக்கியது என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து தஞ்சாவூா் இருப்புப்பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!