Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை அருகே தபால் நிலைய முதன்மை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…..

கோவை மாவட்டம்,  வால்பாறை எடுத்த அப்பர்பாரளை ஏஸ்டேட்டில் குடியிருந்து வரும் செந்தில்குமார் ஏன்பவரின் மகள் ஜெயப்பிருந்தா( வயது 21). இவர் பெரியகல்லார் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் தபால் நிலைய முதன்மை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஜெயபிருந்தா பணி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் தன்னுடைய தாய் மதிய உணவு இடைவேளைக்கு வந்துள்ளார். அவர் தன்னுடைய வீட்டில் வளர்க்கக்கூடிய கன்று குட்டியை வீட்டின் அருகாமையில் கட்டி விட்டு வருவதற்குள் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயபிருந்தா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் வந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த மகளை பார்த்து கதறி அழுதார் . அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பிரதேசத்தை கைபற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!