Skip to content

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…. ஆராதனை…

தமிழகத்தில் பல்வேறு முருகன் ஆலயங்களில் இன்று ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேர், நெய் இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

நடைபெற்றது. அதை தொடர்ந்து பாலமுருகனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி பண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். பின்னர் அதைத் தொடர்ந்து தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் பாலமுருகனை வழிபட்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!