Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் மாநில அளவிலான கூடைப்பந்து இறுதிப் போட்டி… மதுரை காவல்துறை அணி சேம்பியன்….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் கரூர் டெக்ஸிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில் ஏழாம் ஆண்டு மாநில அளவில் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி கடந்த 20 ஆம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது.

இதில் கரூர்,மதுரை,
திண்டுக்கல்,நாமக்கல், திருச்செங்கோடு,தாராபுரம், சென்னை, திருச்சி,சேலம், கும்பகோணம்,கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 24 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த போட்டி முழுவதும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது, இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மதுரை காவல்துறை அணியும், ஈரோடு இ எம் ஆர் அணியும் மோதியதில் 4 9 -31 என்ற புள்ளி கணக்கில் மதுரை காவல்துறை அணி சேம்பியன் பட்டத்தை வென்றது.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு கரூர் மாநகராட்சி மேயர் சுழல் கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!