Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நம்பிக்கையில்லா தீர்மானம்.. பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார்..

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தின் மீது நேற்று இரண்டாவது நாளாக மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மணிப்பூரில் இந்தியாவை பா.ஜ.க. கொன்றுவிட்டது என்று ஆவேசமாக பேசினார். மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இரானி, அமித்ஷா ஆகியோர் அவருக்கு பதிலடி கொடுத்தனர்.  இந்த பரபரப்பான சூழ்நிலையில், நம்பிக்கையில்லாத தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (இன்று) பதில் அளிப்பார் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!