Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ….வீணாக வெளியேறும் பல லட்சம் லிட்டர் குடிநீர்.

கரூர், குளித்தலை அருகே ஆ. உடையாப்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது. கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மருங்காபுரிக்கு காவிரி கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது. கழுகூர் உடையாப்பட்டியில் இன்று காலை குளித்தலை மருங்காபுரி காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்

வீணாக வெளியேறி அருகில் இருந்த நிலங்களில் தேங்கியது. குளித்தலை மருங்காபுரி செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் பல இடங்களில் அடிக்கடி இது போன்ற உடைப்பு ஏற்பட்டு பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் அடிக்கடி வீணாக வெளியேறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிரந்தர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!