Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவள்ளூர் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன்  இன்று காலை நடைபயிற்சி சென்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது. பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் (54) திருவள்ளூர்  மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். பார்த்திபன் செம்மர கடத்தல் வழக்குகளில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் இருந்து வந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!