Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சின்ன தாராபுரம் அருகே 6 மாதமாக குடிநீர் வரவில்லை…. காலி குடங்களுடன் சாலை மறியல்….

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி. வெங்கடாபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இங்கு சுமார் ஆறு மாதத்திற்கும் மேலாக குடிநீர் சரியாக வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் என பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் கரூர் முதல் தாராபுரம் சாலையில் பேருந்தை வழிமறித்து சாலை

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!