Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் வஉசி பிறந்தநாள் விழா…சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை பூமாலை வணிக வளாகத்திற்கு முன்புறம் அமைந்துள்ள அவரது மார்பளவு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கரூர் மாவட்ட வ.உ.சி

பேரவை, விஜய் மக்கள் இயக்கம், சோழிய வெள்ளாளர் சமூக நலச் சங்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினர். இதுபோல திருச்சி, தஞ்சை,புதுகை, பெரம்பலூர், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முக்கிய   இடங்களில்  வஉசி பிறந்தநாள் விழா இன்று விமரிசையாக  கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!