Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கல்லக்குடி அரசு ஆ.சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ நேரில் ஆய்வு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக்கு இன்று நேரில் சென்ற லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் ஆய்வு பணிகளை மேற்கொண்டு பொதுமக்களிடமும் மருத்துவர்களிடமும் மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அரசு மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை செய்ய ஸ்கேன் அறை ஏற்படுத்தி தர வேண்டுமென

கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் தேவையான வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். இந்த ஆய்வின் போது புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் கோல்டன் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர், கல்லக்குடி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!