Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிக்பாஸ் 7….பங்கேற்கும் நடிகர், நடிகைகள் பெயர் வெளியீடு

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அடுத்த மாதம் 1-ம் தேதி  விஜய் டிவியில் தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த புரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில்,  விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த், நடிகை ரோஷினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் ரவீனா தாஹா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஷகிலாவின் மகள் மிலா, நடிகர் பப்லூ பிருத்வீராஜ், ரேகா நாயர் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் இந்த சீசனுக்கான உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியலில் உள்ளதாக தெரிகிறது.

உறுதிப்படுத்தப்படாத பட்டியலில் விஜய் டிவி ஜாக்குலின், பயில்வான் ரங்கநாதன் மற்றும்  கோவை பஸ் டிரைவர் ஷர்மிளா உள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் போட்டியாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!