Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூரில் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா…. குன்னம் ராஜேந்திரன் வேண்டுகோள்

பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 -வது பிறந்த நாளான 15.9.2023,
(வெள்ளிக்கிழமை ),காலை 9மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு, மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன் (எனது) தலைமையில்,சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில்,மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது .
இந்த நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள்,
ஒன்றிய பெருந்தலைவர்கள், துணைப் பெருந்தலைவர்கள்,
கிளைக் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், கழக செயல்வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு குன்னம் சி. ராஜேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!