Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் டூவீலரில் குட்கா சப்ளை 182 கிலோ குட்கா அதிரடி பறிமுதல்…

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்தி வரப்பட்ட, 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 182 கிலோ குட்கா பொருட்களை எஸ்பியின் தனிப்படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

திருச்சி திருவரம்பூரில் இருசக்கர வாகனத்தில் வைத்து, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டு, விநியோகம் செய்யப்படுவதாக, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, எஸ்.பி., தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் குட்கா புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது

கடத்தி வந்த திருவெறும்பூர் சோழமாதேவி பகுதியை சேர்ந்த அஷ்ரப் அலி, தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த விக்னேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரண்டு மொபைல் போன்கள் மற்றும், 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 182 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!