Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் திடீர் மாயம்….

தஞ்சை ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 14, 13, 11 வயதுடைய சகோதரிகள் 3 பேர் நேற்று காலை வீட்டில் குப்பை கொட்டி விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றனர். ஆனால் வெகு நேரமாகியும் 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமிகளின் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.‌ மேலும் சம்பவ இடத்தில் பதிவான சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!