Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி நீர் கோரி… தஞ்சை அருகே விவசாயிகள் ரயில் மறியல்

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும்,  உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கோரியும் , காய்ந்து போன குறுவை பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இன்று  தஞ்சை மாவட்டம்  பூதலூரில்  ரயில் மறியல் போராட்டம் நடந்தது.  பூதலூர் போலீசார்  மற்றும் ரயில்வே போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் இந்த போராட்டம் நடந்தது.   போராட்டத்திற்கு காவிரி உரிமைக்கு குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை வகித்தார். போராட்டக்காரர்களை கண்டதும் 500 மீ தூரத்திற்கு முன்பே ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் போலீசார்  போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!