Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய அரசை கண்டித்து … காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்….

தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர், அக்கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் கில்லிபிரகாஷ் தலைமையில் கட்சிக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவிரி ஆற்றில் நீர் திறந்துவிடப்படாததால் வயல்களில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள்

கருகி டெல்டா பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். முடிவில், இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டும் விதமாக துலாக்கட்ட காவிரியில் அமைந்துள்ள நந்திதேவர் சிலையிடம் மனு அளித்து அவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!